புராட்டாசி மாத ஸ்பெஷல் ருசியான ப்ரோக்கோலி சாம்பார் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: ரொம்ப ரொம்ப சுலபமான ப்ரோக்கோலி தண்டு சாம்பார் இதோ உங்களுக்காக. இந்த பிரக்கோலியை எப்படி சமைப்பதுஎன்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.பிரக்கோலியை வாங்கி வீட்டில் வைத்து சமைக்காமல் விட்டு விட்டால் அது மஞ்சள் நிறத்தில்மாறிவிடும். அப்படி நிறம் மாறிவிட்டால் அதை சமைத்து சாப்பிட வேண்டாம். வாங்கியவுடன்கூடுமானவரை ஃப்ரிட்ஜில் கூட வைக்காமல் அப்போதே சமைப்பது நல்லது.

Ingredients:

  • 2 கப் துவரம் பருப்பு
  • 1 ப்ரோக்கோலி
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 பல் பூண்டு
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • 1/2 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  • வெல்லம்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • சீரகம்
  • வெந்தயம்
  • காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாத்திரத்தில் துவரம் பருப்புடன் பூண்டு. மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பாதி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம்அரை பதம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய ப்ரோக்கோலித் தண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  4. பிறகு சாம்பார் தூள், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து, தேவையெனில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் அத்துடன் வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. நன்கு கொதி வந்ததும் ப்ரோக்கோலித் தண்டு வெந்ததைச் சரி பார்த்து, வெல்லம் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.