ருசியான சின்ன வெங்காய காரக்குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

Summary: நாம் காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வைப்போம், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சின்ன வெங்காயத்தை வைத்து ஒரு காரக்குழம்பு எப்படி வைப்பது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 10 சின்ன வெங்காயம்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 4 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • புளி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • தலா ½ டீஸ்பூன் வெந்தயம், கடலைப்பருப்பு
  • கருவேப்பிலை
  • 100 மில்லி எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயத்தை தூள் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து புளியை 500 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடையாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து பின்னர் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
  4. அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விட்டு திக்கான பதம் வந்தவுடன் கார்டுவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  5. இப்பொழுது அருமையான வெங்காய காரக்குழம்பு ரெடி.