தித்திக்கும் சுவையில் கேரட் பூசணி கீர் இப்படி சுலபமாக வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்க!

Summary: கீர்ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல்என்பதால், கேரட் கீர் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கேரட்ட உடன் பூசணிக்காயும் சேர்த்து கீர் செய்யலாம். குழந்தைகள் பூசணிக்காய் சாப்பிட அடம் பிடித்தால் அவர்களுக்கு இது மாதிரியான சுவையான கீர் செய்து கொடுக்கலாம்.

Ingredients:

  • 100 கிராம் கேரட்
  • 100 கிராம் மஞ்சள் பூசணி
  • 5 பாதாம்
  • 5 முந்திரி
  • 1 கப் நாட்டுசர்க்கரை
  • ஏலக்காய்ப்பொடி
  • 1/2 லிட்டர் பால்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி நன்கு காய்ச்சி ஆற விடவும். பின் காரட், பூசணி ஆகிய இரண்டையும் துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 2 விசில் வரை குக்கரில் விட்டு வேகவிடவும்.
  2. இவை ஆறியபின் ஒரு மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் முந்திரி, பாதாம் இரண்டையும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்த பின்பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின் அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பால், நாம் அரைத்த விழுது மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடவும். பால் நன்கு கொதித்ததும் அதில் சிறிது ஏலக்காய்ப் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் சூடாக்கி இறக்கவும்.
  4. அவ்வளவுதான் சுவையான கேரட் பூசணிக்காய் கீர் தயார். இதனை பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.