உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸை வைத்து இப்படி பொரியல் செஞ்சீங்கன்னா ஒரு தட்டு சோறும் காலி ஆயிடும்!!

Summary: குழந்தைகள் அவர்களுக்கு சாப்பிட ஏதாவது உருளைக்கிழங்கு பொரியல் செய்து கொடுக்க வேண்டும் என்ற கேட்டால்இப்படி பீன்ஸ் சேர்த்து செய்து கொடுங்கள். பீன்ஸ் உருளைக்கிழங்கை வைத்து இந்த ஒரு சுலபமானஉருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டால் குழந்தைகளுக்குமதிய நேரத்தில் இதை செய்து கொடுத்து சமாளித்து விடலாம். வாங்க உருளைக்கிழங்கு பீன்ஸ்பொரியல் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 200 உருளைக்கிழங்கு
  • 100 பீன்ஸ்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து, நறுக்கி கொள்ளவும். பின்பு பீன்ஸ், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  2. பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
  3. பின்னர் அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்கியபின், பீன்ஸ், பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும்.
  4. பின்னர் அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கிளறி நன்கு வேகும் வரை மூடி வைக்கவும்,
  5. அதற்கு பின்பு வேக வைத்த கலவையானது நன்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்கி பறிமாறினால் ருசியான உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் தயார்.