எவ்வளவு செய்தாலும் காலியாகும் மட்டன் கீமா குழம்பு இனி இப்படி செய்து பாருங்க வீடே மணமணக்கும்!

Summary: அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம்தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது.இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா?மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட இன்று என்ன கறி குழம்பா? என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும்மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன.

Ingredients:

  • 250 கிராம் மட்டன் கீமா
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 சிட்டிகை மிளகுத் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை கரம் மசாலா
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தக்காளி,கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் கீமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. கழுவி கீமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.
  3. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்த பின் மீதமுள்ள மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும் அதில் ஊற வைத்த கீமாமற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
  5. அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.. குழம்பு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
  6. மட்டன் கீமா குழம்பு தயார்.