ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் இனி மீன் வறுவல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசி நாக்குல அப்படியே நிக்கும்!

Summary: மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்றுஇரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ளமுறைப்படி ஸ்பைசி செட்டிநாடு மசாலா சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் மிகவும் விருப்பமாகசாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1/2 கிலோ மீன்
  • 2 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 இன்ச் நீளம் இஞ்சி
  • 8 பல் பூண்டு
  • 1 எலுமிச்சை
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 தேக்கரண்டி சோளமாவு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் உப்பூ சோள மாவு போட்டு பிசையவும்.
  3. சோளமாவு மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்க உதவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர் பதனப் பெட்டியில் வைக்கவும்.
  4. பின்னர்,ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசறி வைத்த மீன் துண்டங்களில் ஒவ்வொன்றாய் போடவும்.
  5. இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும்.இந்த மீன் மிளகு வறுவல் நன்றாக இருக்கும்.