சுவையான சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி ?

Summary: பொதுவாக ஈரல் குழம்பு, ஈரல் கிரேவி, ஈரல் வறுவல் என ஈரலை பயன்படுத்தி செய்யும் உணவுகளை பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஈரலை பயன்படுத்தி செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும் ஆனால் ஒரு சில தினங்களில் நாம் சைவ உணவுகளை செய்யும் பொழுது வழக்கமாக சாம்பார் அல்லது புளி குழம்பு என ஒரே மாதிரியான குழம்புகளை சுழற்சி முறையில் வைத்து சாப்பிடுவோம். ஆனால் இன்று நாம் சைவ ஈரல் குழம்பு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இந்த குழம்பு ஈரலை பயன்படுத்தி சமைத்தால் எப்படி இருக்குமோ அதே சுவையில் இந்த குழம்பு இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க இதை சைவமாகவே நாம் செய்ய போகிறோம் ஈரல் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 250 பச்சை பயறு
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 4 tbsp எண்ணெய்
  • ½ tbsp சோம்பு
  • 1  பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 தக்காளியில் அரைத்த பேஸ்ட்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 ½ tbsp மிளகாய் தூள்
  • 1 ½ tbsp மல்லி தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு
  • 1 ½ டம்பளர் தண்ணீர்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் 250 கிராம் பச்சை பயிரை 4 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்து பின் தண்ணீரை வடிகட்டி பயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்துக் கொண்ட மாவை ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்து. பின் வேக வைத்த இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், அரை டீஸ்பூன் அளவு சோம்பு சேர்க்கவும், சோம்பு நன்றாக பொரிந்து வந்தவுடன் பொடியாக நறுக்கி ஒரு வெங்காயம், சிறிது கருவேப்பிலை மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின் அதனுடன் இரண்டு தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
  5. பின் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றறை டீஸ்பூன் மிளகாய் தூள், ஒன்றறை டீஸ்பூன் மல்லி தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  6. பின் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நாம் சிறு துண்டுகளாக நறுக்கிய இட்லியை சேர்த்து ஐந்து நிமிடம் கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  7. பிறகு குழம்பு கொதித்து எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான சைவ ஈரல் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.