நவதானிய தோசை ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசியாகவும் இருக்கும் உடலுக்கு சத்துக்களும் கிடைக்கும்!

Summary: அரிசியே சேர்க்காமல் ஆரோக்கியமான நவதானிய அடைதோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன். வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாமசாப்பிடுவாங்க.உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாதுஎன்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள்இந்த நவதானிய அடை தோசை செய்து சாப்பிடலாம். இந்த அடை தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய்சட்னி, அவியல், சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். நேரத்தைக் கடத்தாமல் அந்த செய்முறையை பார்க்கலாம்.

Ingredients:

  • 1/4 கப் பாசிப்பயறு
  • 1/4 கப் கருப்பு உளுத்தம்பருப்பு
  • கப் கொண்டைக்கடலை
  • கப் பச்சரிசி
  • கப் துவரம் பருப்பு
  • கப் சோயா
  • கப் வெள்ளை சோளம்
  • 1 டேபிள் ஸ்பூன் எள்ளு
  • 3 பச்சை மிளகாய்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கறிவேப்பிலை
  • 1//2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்துமல்லி

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  3. பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்..
  4. இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.