சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு எப்படி ருசியா செய்வதுன்னு  தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

Summary: சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு ,புளிப்பு,இனிப்பு மற்றும் காரம் அனைத்தும் சேர்ந்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபியை இனி பார்க்கலாம். குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது . அதுலையும் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல இருக்கும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும்.

Ingredients:

  • 5 சேப்பங்கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 10 பல் பூண்டு
  • 10 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியாத் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
  • எலுமிச்சை அளவு புளி
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சேப்பங்கிழங்கை உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேக வைத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,  காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.தக்காளியுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  4. பின் அதில் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  5. குழம்பு பச்சை வாசனை போனவுடன் வேகவைத்து அறிந்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். சுவையான சேப்பங்கிழங்கு குழம்பு ரெடி.