மணத்தக்காளி வற்றல் வைத்து அருமையான  ஒரு பூண்டு மணத்தக்காளி குழம்பு இப்படி ட்ரை பன்னி பாருங்க!

Summary: உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க மணத்தக்காளி அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பூண்டு மணத்தக்காளி வைத்து சுவையான குழம்பு எப்படி தயாரிப்பது?ஆரோக்கியம் நிறைந்த இந்த பூண்டு மணத்தக்காளி குழம்பு வீட்டில் செய்வது எப்படி? என்பதைதான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/2 கப் உரித்த பூண்டு
  • 3 டீஸ்பூன் மணத்தக்காளி வற்றல்
  • வெல்லம்
  • புளி
  • 1 டீஸ்பூன் உதிர்த்த வெங்காய வடகம்
  • நல்லெண்ணெய்
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும்
  2. புளியைக் கரைத்து.. உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  3. எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.பூண்டுபாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல் சேர்க்கவும்.
  4. வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். நன்றாக கொதித்து வரும்போது இறக்கினால் சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு தயார்!