கிராமத்து ஸ்டைலில் வெண்டைககாய் மோர் குழம்பு ஓரு தரம் செய்து பாருங்க! ஒரு சொட்டு குழம்பு கூட மிச்சமாகாது!

Summary: வெண்டைக்காய் புளிக்குழம்பு வைப்பது போல வெண்டைக்காயிலும் மோர் குழம்பு வைக்கலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது. உடலுக்கு குளிர்ச்சியூட்டும் மோர் குழம்பை எளிமையாக செய்வது குறித்து பார்க்கலாம்.

Ingredients:

  • 6 வெண்டைக்காய்
  • 1 கப் சிறிது புளித்த தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 வரமிளகாய்
  • கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் வெண்டைக்காயை கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, 1 வரமிளகாய் நறுக்கிய வெண்டைக்காய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நன்கு வதக்கி விடவும்.
  3. பின் துவரம் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  4. ஒரு மிக்ஸியில் துவரம் பருப்பு ஊற வைத்தது, இஞ்சி,பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தனியா, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் இந்த மோர் குழம்பை அடுப்பில் வைத்து, சூடேற்றவும்.
  6. ஓரங்களில் நுரை வரும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, தாளித்து வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து விடவும்.
  7. சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.