நாவில் எச்சி ஊறும் சீனி பனியாரம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

Summary: பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்துடன் இந்த சீனி பனியாரம் ரெசிபியை செய்து சாப்பிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுங்கள். ஆம், இன்று சுவையான சீனி பனியாரம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பனியாரம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி
  • எண்ணெய்
  • ¼ கப் ஜவ்வரிசி
  • ¼ கப் தண்ணீர்
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • ½ கப் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 1 சிட்டிகை உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு பவுள் எடுத்து அதில் ஒரு கப் பச்சரிசி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசியை சேர்த்து. பின் அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு 3 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் மூன்று மணி நேரங்கள் நன்றாக ஊறிய ஜவ்வரிசியையும், பச்சரிசியையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கால் கப் அளவிலான தண்ணீர் சேர்த்து திருதிருவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் மிக்ஸி ஜாரில் திருதிருவென அரைத்து வைத்திருக்கும் மாவுடன் கால் கப் துருவிய தேங்காய், அரை கப் சர்க்கரை மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்த மாவை தனியாக ஒரு பெரிய பவுளில் ஊற்றி அதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து பனியாரம் மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக எரிய விடவும்.
  5. பின்பு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் பனியார மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றிக் கொள்ளவும் இப்படியாக ஒரு ஐந்து கரண்டிகள் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  6. பனியாரம் இருபுறமும் வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் மாவையும் ஊற்றி பனியாரம் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சீனி பனியாரம் இனிதே தயாராகிவிட்டது.