காலை டிபனுக்கு குதிரைவாலி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிட்டிருகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை  விடஇதன் சுவை நன்றாகவும் இருக்கும். இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால்,  குதிரைவாலி தோசையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.

Ingredients:

  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • டீஸ்பூன் சீரகம்
  • எண்ணெய்
  • உப்பு
  • 1 கப் உளுந்து
  • சிறிய இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
  2. மிக்சியில் சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
  3. சூடானதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சத்து நிறைந்த குதிரைவாலி தோசை ரெடி.