மணக்க மணக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: வெண்டைக்காய் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் மிகவும் அத்யாவஸ்யமானஒரு காய்கறி என்பதை நாம் சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகையவெண்டைக்காயை ஒரு சில குழந்தைகள் உண்ண பிடிவாதம் பிடிப்பது உண்டு. அப்படி பிடிவாதம்பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்ணக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய ஒரு அருமையானவெண்டைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • சின்ன வெங்காயம்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • உளுத்தம்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு பொடி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும். வெண்டைக்காயைக் கழுவி ரொம்பத் தகடாக இல்லாமல், கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  2. கடுகு, எண்ணெயில்போட்டுத் உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை வதக்கவும். வெண்டைக்காயைப் போட்டுப் பிரட்டி, மூடி வைத்து சிறு தீயில் வதக்கவும்.
  3. வெண்டைக்காய் கொழ கொழ என்று இருந்தால் தயிரையும் ஊற்றிக் கிளறவும். காய் வதங்கியதும் மிளகு பொடி தூவி இறக்கவும்.
  4. மழைக்காலத்தில் ரசம், மிளகு சாதம், பொரிச்ச குழம்பு போன்ற மிளகு சேர்ந்த பதார்த்தங்களுக்கு சூப்பர் ஜோடி இந்தப் பொரியல்.