வாரம் ஒரு முறையாவது ருசியான ராகி இட்லி இப்படி செய்து சாப்பிடுங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது!

Summary: இட்லி என்பது நம்முடைய தென்னிந்திய பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது. காலை நேர உணவு என்று நினைத்தவுடன்இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி என்பது தான் ஞாபகத்திற்கு வரும். அனைத்து தென்னிந்தியஉணவகங்களில் இட்லி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட இட்லியை நம் வீட்டில்செய்வதற்கு இராகி கொண்டு தயாரிக்கவும் இட்லி மாவு அரைக்கும் போது எந்த பொருளை சேர்த்தால்,இன்னும் கூடுதல் சத்தான இட்லியை பெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்தபகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

Ingredients:

  • 2 கப் இராகி
  • 1/2 கப் குண்டு உளுந்து
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • உப்பு
  • நெய்

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. இராகியை தண்ணீரில் நன்கு நான்கைந்து முறை களைந்து, கல் அரித்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் நன்றாக ஊறியிருக்கும்.
  2. பிறகு மேலும் இரண்டு அல்லது மூன்று முறைகளாவது களைந்து. தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
  3. மற்ற தானியங்களைப் போல் இராகி ஒரே நாளில் முளைவிடுவதில்லை.அதனால் கூடுதலாக சில மணி நேரங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
  4. உளுந்தையும் வெந்தையத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கழுவி 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.க்ரைண்டரில் முளைகட்டிய இராகியைப் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்,
  5. பிறகு ஊற வைத்த உளுந்தையும், வெந்தயத்தையும் அரைத்து எடுக்கவும்,உளுந்து மாவுடன் இராகி மாவைச் சேர்த்து, உப்பு போட்டு கையினால் நன்கு கலந்து வைக்கவும்
  6. ஆறிலிருந்து எட்டு மணி நேரங்களில் மாவு புளித்து இட்லி, தோசை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அவரவர் வசிக்கும் இடங்களின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப நேரம் மாறுபடும்.
  7. புளித்தமாவு அரைத்து வைத்த போது உள்ள அளவைவிட, பாத்திரத்தில் உயர்ந்து (பொங்கி) இருக்கும்). இட்லி தட்டில் லேசாக நெய் அல்லது எண்ணெய் தடவி, மாவை எடுத்து இட்லிகளாக ஊற்றி வேக வைக்கவும்.
  8. மினி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விரைவில் கொதிக்கத் துவங்கிவிடும். அதனால் இட்லியும் விரைவில் வெந்துவிடும். வெந்ததைச் சரி பார்த்து இட்லியை எடுக்கவும்.
  9. இட்லிகளை எடுப்பதற்கு முன்பாக ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் இட்லி நட்டின் பின்பகுதி வேசாகப் படும்படி வைந்தெடுத்து, இட்லிகளை எடுத்தால் மிகவும் எளிதாக வரும்
  10. தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி, இதே மாவை தோசையாகவும் சுட்டெடுக்கலாம். ஹெல்தி& டேஸ்டி ஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி& தோசை ரெடி
  11. சட்னி ,சாம்பாருடன் பரிமாறவும்.