முள்ளங்கியில் இப்படி ஒரு செட்டிநாடு மசாலா செய்து பாருங்க! இதற்கு முன் முள்ளங்கியை எவ்வளவு ருசியா சமைத்திருக்க மாட்டீங்க!

Summary: செட்டிநாடு முள்ளங்கி மசாலா உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த மசாலா வெள்ளை சுடு சாதத்தில் போட்டுப்பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்றால்இப்படி செஞ்சு பாருங்க.

Ingredients:

  • 1 முள்ளங்கி
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 4 வரமிளகாய்
  • 5 பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, மல்லி சேர்த்து வறுக்க. வேண்டும்.
  2. பின் அதில் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை ஒவ்வொன்றாக சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  3. பிறகு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின்அதில் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, முள்ளங்கி வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால்,
  5. சுவையான செட்டிநாடு முள்ளங்கி மசாலா தயார்.