கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில், நவரத்தின கிரேவி ஒரு தரம் வீட்டில் செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Summary: அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில், அசைவ சாப்பாடுசாப்பிட வேண்டும். கறி குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது,கொண்டைக்கடலை,பட்டாணி மொச்சையை வைத்து இப்படி ஒரு கிரேவிசெய்து சாப்பிடுங்கள். நிறைவானஅசைவ குழம்பு சாப்பிட்ட திருப்தியை இந்த கிரேவி உங்களுக்கு கொடுக்கும். மிக மிக சுலபமானமுறையில் ஒரு ‘நவரத்தின கிரேவி’ எப்படிசெய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் முதல் நாள் இரவே அனைத்து கடலை வகையை தண்ணீரில்போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய கடலை வகையை வைத்து இந்த நவரத்தினகிரேவி செய்து பாருங்கள்.

Ingredients:

  • 50 கிராம் பட்டாணி
  • 50 கிராம் கொண்டைகடலை
  • 50 கிராம் சோயா பீன்ஸ்
  • 50 கிராம் மொச்சை
  • 50 கிராம் பாசிப்பயிறு
  • 50 கிராம் காரட்
  • 50 கிராம் பீன்ஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளரு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • கறிவேப்பில்லை
  • கொத்தமல்லி
  • 1 தேவைகேற்ப எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும், இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு பின்ஸ், காரட், உருளைக்கிழங்கு, தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
  3. பிறகு ஒரு வானாலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
  4. சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டுவிழுது, கரம் மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.
  5. உப்பு,தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.