புதிய வகையில் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Summary: வார இறுதி நாட்கள் வந்தாலே அதனுடன் சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது, வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இது போன்ற சமயத்தில் புதிதாககவும், எளிமையாகவும் அதே நேரம் அதீத சுவையில் இருக்கும் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைகொடுக்கும். இந்த வார கடைசி நாட்களில் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் கலியாகும். ஏன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு செட்டிநாடு ரெசிபியாக இருக்கும்.

Ingredients:

  • ½ கிலோ சிக்கன்
  • 2 தக்காளி
  • 3 பெரியவெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • எண்ணெய்
  • 1½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 5 மிளகு
  • ¼ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு சிறு சிறு துடுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. பிறகு மிக்சியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. வதங்கியதும் அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் தூள், மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும்.
  6. பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும்.
  7. அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.
  8. பிறகு குக்கரை மூடி போட்டு 8 நிமிடகள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.
  9. இப்பொழுது சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்.