ருசியான நார்த்தங்காய் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்கமாட்டாங்க!

Summary: பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெரியபிரச்சனையை இந்த குழம்பு தான். இன்று இந்த குழம்பு செய்து விட்டு நாளை என்ன செய்வதுஎன்று யோசிப்பதே பெரும் பிரச்சனை இப்படி இருக்கையில் சமைக்க வீட்டில் காய்கறி எதுவும்இல்லாத பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பெரிய போராட்டமே நடந்து விடும். அப்படியான சூழ்நிலையைஎளிதில் சமாளிக்க அட்டகாசமான இந்த நார்த்தங்காய் சாதம் செய்து அசத்தலாம்.

Ingredients:

  • வேக வைத்த சாதம்
  • நார்த்தங்காய்
  • எண்ணெய்
  • சீரகம்
  • கடுகு
  • உளுந்தம்பருப்பு
  • வேர்க்கடலை
  • முந்திரிபருப்பு
  • இஞ்சி துண்டு
  • கடலை பருப்பு
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு நார்த்தங்காய மட்டும் எடுத்து சின்ன பாத்திரத்தில் புழிஞ்சி சாறை மட்டும் எடுத்துக்கணும்.
  2. பின்னர் அடுப்பில கடாயை வச்சி அதில கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிச்சதும், சீரகம், உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலைய போட்டு ஓரளவுக்கு நல்லா சிவக்க வதக்கிக்கணும்.
  3. மேலும் வதக்கிய வேர்க்கடலையுடன், கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய பொடியா நறுக்கி போட்டு லேசாக வதக்கிட்டதும், மஞ்சள் தூள், உப்பையும் போட்டு நல்லா வதக்கிக்கணும்,
  4. பிறகு வதக்கிய கலவையுடன், கொத்தமல்லி இலையை பொடியா நறுக்கி போட்டு நல்லா வதக்கணும்.
  5. பிறகு,புழிஞ்சி வச்ச நார்த்தங்காய் சாறை ஊற்றியதும், வேக வச்ச சாதத்தை போட்டு நல்லா கிளறிவிட்டு இறக்கி பரிமாறினால் ருசியான நார்த்தங்காய் சாதம் ரெடி.