கிராமத்து சுவையில் முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு சொட்டு குழம்பு மிஞ்சாது!

Summary: நமக்கு மிகவும் சுலபமாக மலிவாகக் கிடைக்கக்கூடியகீரை வகைகளில் சத்துக்கள் ஏராளம். சத்தான பொருட்களை சாப்பிட வேண்டுமென்றால் விலை அதிகமானபொருட்களை தான் சாப்பிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கக்கூடியபொருட்களின் மதிப்பை நாம் முழுமையாக தெரிந்து கொள்வது கிடையாது. நமக்கு சுலபமாக மலிவாககிடைக்கக்கூடிய சத்தான பொருட்களின் பட்டியல் ஏராளம். அந்த வரிசையில் இந்த முருங்கைக்கீரையும்ஒன்று. எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் அந்த காலத்தில் முருங்கைக்கீரை மரம்கட்டாயம் இருக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிடுவார்கள்.ஆரோக்கியமாக இருந்தார்கள்.அத்தகைய முருங்கைக்கீரையை வைத்து பொரிச்ச குழம்பு சுலபமாகஒரு எப்படி வைப்பது என்று தெரிந்துகொள்வோமா.

Ingredients:

  • 1 சிறு கட்டு முருங்கைக்கீரை
  • மஞ்சள் தூள்
  • 1/2 கப் சிறு பருப்பு
  • உப்பு
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • 1 மேசைக்கரண்டி உளுந்து
  • 3 மிளகாய் வற்றல்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 3 கொத்து கறிவேப்பிலை
  • 2 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
  2. அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.
  3. சிறு பருப்பில் நீர் விட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து அரை கப் நீர் விட்டு மூடி வேகவிடவும்,
  4. முருங்கைக்கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பு மற்றும் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
  5. பிறகு தேவையான நீர் விட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.