எப்போதும் ஒரே மாதிரியான தோசை செய்து சலித்து விட்டதா ? சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையை ருசியாக இப்படி செய்து பாருங்க!

Summary: சர்க்கரைவள்ளி கிழங்கு  என்பதுநம் ஊர்களில் குறிப்பிட்ட  சீசனுக்குகிடைக்கும் சத்தான கிழங்கு வகையாகும்.எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை நாம் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆனால் இதை வைத்து தோசை வார்க்க முடியும் என்பது நாம் பலரும் அறியாத ஒன்று. சில குழந்தைகள் கிழங்காக அவித்து கொடுக்கும் பொழுது உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு நாம் சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையினை செய்து கொடுக்கலாம்.

Ingredients:

  • ¼ கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு
  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 1 துண்டு இஞ்சி
  • 4 வற்றல்மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, துருவிவைத்துக்கொள்ளவும்.
  2. அரிசியை ஊறவைத்து சீரகம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
  3. கடைசியாக வேக வைத்து துருவி வைத்துள்ள சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. பின்னர் அடுப்பில் தோசை தவாவை வைத்து சூடு செய்து தோசை வார்த்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், திருப்பிப் போட்டு எடுத்தால் மிகவும் சுவையான சத்தான சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை சுவைக்கத்தயார்.
  5. இந்த சர்க்கரைவள்ளி கிழக்கு தோசை கொஞ்சம் இனிப்பு சுவையில் இருக்கும். எனவே மாவு அரைக்கும் போது மிளகாய் சேர்க்க வேண்டும். இந்த தோசைக்கு காரச்சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.