கல்யாண வீட்டு சுவையில் கருணைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி ?

Summary: கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் பல கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் ஒரு உணவு என்றால் அது உருளை கிழங்கு வறுவல், அல்லது கருணைக்கிழங்கு பொரியல் தான். இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் எப்படி கல்யாண வீட்டு சுவையில் கருணைக்கிழங்கு பொரியல் செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை படித்து பார்த்து நீங்களும் சமைத்து பாருங்கள்.

Ingredients:

  • ¼ கிலோ கருணைக்கிழங்கு
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 1 முழு பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, சேர்த்து வதக்கவும்.
  2. நன்கு வதாகியதும் உப்பு, மிளகாய் தூள், மற்றும் கருணைக்கிழங்கு, சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
  3. விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பறிமாறவும்.