வரகு வெள்ளரி தோசை இப்படி மட்டும் சுலபமாக செஞ்சு பாருங்க இந்த காலத்துக்கு குழந்தைகள் கூட அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க!

Summary: அரிசியை உணவோடு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள்இந்த வரகு அரிசி தோசை செய்து சாப்பிடலாம். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்துசூப்பரான ருசியான தோசை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அவியல்,சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். நேரத்தைக்கடத்தாமல் அந்த ரெசிபியை பார்க்கலாம்.

Ingredients:

  • 100 கிராம் வரகு
  • 100 கிராம் பிஞ்சு வெள்ளரிக்காய்
  • 1 மிளகாய்
  • தேங்காய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. வரகை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெள்ளரிக்காயைதுண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. மிக்ஸியில் ஊற வைத்த வரகு மற்றும் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து எடுக்கவும். அதேப் போல் மிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லியை அரைத்து எடுக்கவும்
  3. வரகுமாவுடன் அரைத்த மிளகாய் கொத்தமல்லி விழுதை சேர்த்து கலக்கவும். மாவு புளிக்கத் தேவையில்லை.
  4. உடனே தோசையாக வார்த்து எடுக்கலாம். சுவையான சத்தான தோசை ரெடி.