சுவையான முருங்கைகீரை சட்னி செய்வது எப்படி ?

Summary: நீங்கள் இப்பொழுது புதியதாக ஏதாவது ஒரு சட்னி செய்ய விருப்பபட்டால் நீங்கள் கண்டிப்பாக இந்த முருங்கைக்கீரை சட்னியை செய்து பாருங்கள். முருங்கைக்கீரை பொரியல், அவியல் போன்ற உணவுகளை கூட வெறுத்து ஒதுக்குபவர்கள் இந்த முருங்கை கீரை சட்னியை சேர்த்து சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது பிடித்தமான சட்னியாக இது மாறி போகும் மேலும் முருங்கைக்கீரையில் பல சத்துக்கள் உள்ளதால் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதன் சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும்

Ingredients:

  • 1 கட்டு முருங்கைகீரை
  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp உளுந்த பருப்பு
  • ¼ tbsp மிளகு
  • ¼ tbsp சீரகம்
  • 1  சின்ன துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 1  சின்ன துண்டு புளி
  • 4 tbsp தேங்காய் துருவல்
  • உப்பு
  • தண்ணீர்
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கட்டு முருங்கைக்கீரை இலையை தனியாக எடுத்து நன்கு தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும், பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு கடலை பருப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  2. அதன் பின்பு இதனுடன் கால் டீஸ்பூன் மிளகு மற்றும் கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களும் நன்றாக வறுத்தெடுத்த பின் இதனுடன் ஒரு சின்ன துண்டு இஞ்சி, 12 தோல் உரித்த வெங்காயம், 3 பச்சை மிளகாய் இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு சிறிய துண்டு புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின்பு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நாம் அலசி வைத்திருக்கும் முருங்கைக்கீரை இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கீரை நன்றாக வதங்கி கருபஞ்சை நிறத்திற்கு வந்தவுடன் இதனுடன் நாம் வைத்திருக்கும் நான்கு டீஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் கீரை நன்றாக வதக்கியதும் அடுப்பை அணைத்து குளிர வைத்து, பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய் கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு அதே கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்ந்து தாளித்து பின் சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான முருங்கை கீரை சட்னி இனிதே தயாராகிவிட்டது.