அருமையான நாகர் கோவில் ஸ்பெஷல் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி ஈஸியாக வீட்டில் செய்யலாம்!

Summary: வெள்ளரிக்காய் பச்சடி என்றும் அழைக்கப்படும் இந்த தயாரிப்பு நாகர் கோவில் பாணி ரைத்தா ஆகும், இது மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் சுவையானது மற்றும் மிகவும் சத்தானது. இந்த பசையம் இல்லாத உணவு வெள்ளரிக்காய், தயிர், தேங்காய் மற்றும் சில வழக்கமான தென்னிந்திய மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது லேசான மசாலா மற்றும் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் இரண்டும் இருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

Ingredients:

  • 2 வெள்ளரிக்காய்
  • 1 கப் புளிக்காத கெட்டி தயிர்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் நறுக்கின தேங்காய்
  • உப்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • டீஸ்பூன் கடுகு
  • ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 2 சிவப்பு மிளகாய்
  • 1 ஆர்க்கு கருவேப்பிலை
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 2 பூண்டு
  • 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு பவுளில் வைத்து விடுங்கள். பின் அடுப்பை மீடியத்தில் வைத்து, தேவையான தண்ணீர் விட்டு வெள்ளரிக்காயை வேக விடுங்கள்.
  2. பின் சிறிய மிக்ஸி ஜாரில், தேங்காய் துண்டுகள், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் முக்கால் பங்கு வெந்ததும் நாம் அரைத்ததை சேர்த்து கிளறி, அடுப்பை சிறிய தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  3. பின்னர் கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அடுத்து, உளுந்தம் பருப்பை சேர்த்து, கருகாமல், பொன்னிறமாக வறுக்கவும்.
  4. பிறகு அதனுடன் வெந்த வெள்ளரிக்காயை சேர்த்து, 5 நிமிடம் ஒன்று சேர கொதித்ததும், அடுப்பை அனைத்து விடவும். நன்கு ஆறியதும், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பிறகு பௌலுக்கு மாற்றி, மேலே 1 ஸ்பூன் காய்ச்சாத தேங்காய் எண்ணெய் விட்டு மேலாக கிளறவும். இப்போது, சுவையான நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி தயார்.