சப்பாத்தியுடன் சாப்பிட காரசாரமான ருசியில் சென்னா சாட் மசாலா இப்படி செய்து பாருங்க!

Summary: நீங்கள் வழக்கம் போல் சப்பாத்தி பூரி இட்லி தோசை போண்டா டிபன் வகை உணவுகளுக்கு சாம்பார், கிழங்கு, சட்னி என வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்று ஒரு முறை சொன்னா சேட் மசாலா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இது அட்டகாசமான சுகையில் இருக்கும் அடுத்த முறையும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை செய்து தர சொல்லுவார்கள்.

Ingredients:

  • 1 கப் வெள்ளைக் கொண்டக்கடலை
  • 1 தக்காளி
  • 1 கொடைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கேரட் துருவல்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லித்தழை
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் வெள்ளைக் கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து குடமிளகாய், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பிறகு வேக வைத்த கொண்டைக்கடலுடன் நறுக்கிய காய்கறிகள், கேரட் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சை சாறு, சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து விடவும்.
  4. இதை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு செய்தால் தான் நன்றாக இருக்கும்.