ருசியான ரோட்டோர கடை ஸ்டைலில் முட்டை தோசை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: இந்த முட்டை தோசையை விதவிதமாக நிறைய வகைகளில் செய்யலாம். அதில் மிக மிக எளிமையான முறையில், அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில், ஒரு முட்டை தோசை செய்முறை தான் இது.ஒரு சில ரோட்டு கடைகளில் இப்படிப்பட்ட முட்டை தோசை கிடைக்கும். இதை குழந்தைகளுக்குசெய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தோசையோடு சேர்த்து முட்டை சாப்பிட்டதிருப்தியும் நமக்கு கிடைக்கும். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் தோசை மாவு
  • 2 முட்டை
  • மிளகு தூள்
  • 1 வெங்காயம்
  • வெண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின்பு பாத்திரத்தில் முட்டையை எடுத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
  3. தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி, அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, வெங்காயத்தை தூவவும். பின்பு வேகவைத்த தோசையை சுற்றி சிறிது வெண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போடவும்.
  4. இறுதியில் மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான முட்டை தோசை தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்..