மாலை நேர ஸ்னாகஸாக ருசியான பட்டாணி மசாலா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: அசைவ சமையலை மிஞ்சும் ஸ்பைசி ஸ்னாக்ஸ்,  மசாலா!!!வழக்கமாகாலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில்  பட்டாணி செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னுசொல்லுவீங்க பாருங்க…! பிரட், சப்பாத்தி ரோல்ஸூடன் ஸ்டஃப் செய்தால் சுவை பிரமாதமாகஇருக்கும். பட்டாணி  மிகவும் பிடிக்கும். சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்தபட்டாணி மசாலா செய்யலாம். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் இந்த பட்டாணிமசாலா செய்யலாம்.

Ingredients:

  • 1 ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் கடுகு
  • 3 வரமல்லி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்பொடி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 500 கிராம் பச்சை பட்டாணி
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி
  • 4 பற்கள் பூண்டு
  • உப்பு
  • 2 டீஸ்பூன் மிளகுதூள்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதல்ல பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை பட்டாணி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும்.
  2. பின்பு கடாயை அடுப்புல வச்சி, சிறிது நெய் ஊற்றி உருகியதும், அதில் சீரகம், கடுகு போட்டு தாளித்ததும், அதில் முழு மல்லி, ஏலக்காய் பொடி, நறுக்கி வச்ச பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து, சில நிமிடம் நல்லா வதக்கிக்கணும்.
  3. பின்னர் வெங்காயம் நல்லா வதங்கினதும், அதில் பட்டாணி, நறுக்கி வச்ச இஞ்சி, பூண்டு, ருசிக்கேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து, சில நிமிடம் பட்டாணி நல்லா வதக்கிக்கனும்.
  4. மேலும் பட்டாணியானது ஓரளவு நன்கு வெந்தபின், கடைசியில அதில் பிழிஞ்சி வச்ச எலுமிச்சை சாறை சேர்த்து நல்லா கிளறியபின் இறக்கிவைத்து, நறுக்கி வச்ச கொத்தமல்லிதழையைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், காரமான பட்டாணி ரெசிபி ரெடி!