காரசாரமான ருசியான சிங்கி இறால் வறுவல் இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சிங்கி இறால் வறுவல் இது போன்று ஒரு முறை செய்து அதிகமாகசாப்பிட பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் சிங்கி இறால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு சிங்கி இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு வறுவல்தான் இப்போது பார்க்க போகிறோம்.எப்படி இந்த சிங்கி இறால் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளசெய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து ஒருமுறை செய்து பாருங்க.

Ingredients:

  • 1/4 கிலோ சிங்கி இறால்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி வற்றல் தூள்
  • முருங்கை இலை
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • கடுகு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாத்திரத்தில் சிங்கி இறாலை எடுத்து சுடுநீரில் போட்டு, வைத்து அதன் மேல் ஓட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுத்து கொள்ளவும்.
  2. இறாலை உதிர்ந்து அதனுடன் வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை,கடுகு, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. சிங்கி இறாலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். இப்போது சுவையான சிங்கி இறால் தயார்.