சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்ங!

Summary: பெரும்பாலும் எந்த வகையில் இதை சமைத்தாலும் இவை அட்டகாசமான சுவையில் தான் இருக்கும். இந்த சூப்பை செய்து முடித்து குக்கர் மூடியை திறக்கும்போது இதன் வாசம் வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கொண்டு வந்துவிடும். அது மட்டுமின்றி மட்டன் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.

Ingredients:

  • 1/4 கிலோ மட்டன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • கொத்தமல்லி இலை
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1 தக்காளி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு, வர மல்லி, சீரகம்,மிளகு, தக்காளி அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் 4 கிராம்பு, பிரியாணி இலை, சிறிதளவு சோம்பு, பட்டை சேர்த்து பொரிந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும் மட்டன் வேகும் அளவை விட ஒரு மடங்கு தண்ணீர் அதிகமாக வைக்கவும்.
  5. பின் மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேகவிடவும் 4 லிருந்து 5 விசில் விடவும். பின்னர் விசில் அடங்கியதும் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  6. சுவையான ஆரோக்கியமான மட்டன் சூப் தயார்.