புதுவிதமான இந்த தேங்காய் சட்னி செய்து எப்படி ?

Summary: ஒரே மாதிரியான வகையில் தேங்காய் சட்னி சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய்விடும் ஆனால் இந்த தேங்காய் சட்னியுடன் இன்னும் ஒரு சில பொருட்கள் சேர்த்து அரைத்து சட்னி செய்தால் அதன் சுவையும் மணவும் சற்று வித்தியாசமாக நன்றாகவே இருக்கும். இப்படி நீங்கள் புதுவிதமாக தேங்காய் சட்னி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சற்று வித்தியாசமாக இருக்கும்.

Ingredients:

  • ½ மூடி தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பல் பூண்டு
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 துண்டு புளி
  • உப்பு
  • 2 tbsp பொட்டு கடலை
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு ஊளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு அரை மூடி தேங்காய் எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் தேங்காய்ச் சில்லை கீரி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின் நறுக்கிய தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு பல் பூண்டு ஒரு துண்டு புளி மற்றும் இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளுங்கள்.
  3. பின் இப்பொழுது இதனுடன் மறுபடியும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. இப்போது தேங்காய் சட்னி ஒரு புதிய பிளேவர் ஆக இருக்கும் பின் இதனுடன் நீங்கள் வழக்கம் போல் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதனுடன் கருவேப்பிலை மற்றும் இரண்டு வர மிளகாய் சேர்த்து தாளித்து.
  5. அந்த தாளிப்பை தேங்காய் சட்னியுடன் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான புதிதான தேங்காய் சட்னி இனிதே தயாராகிவிட்டது.