சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான காலிஃபிளவர் கறி குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: என்னதான் வீடுகளில் சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகள் போன்று இன்னும் சில அசைவ உணவுகள் தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் காய்கறியின் பக்கம் கவனம் செலுத்துவதும் நல்லது. இன்று காலிஃபிளவரை கறிச்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி காலிஃபிளவர் கறி குழம்பு செய்வது என்று பார்க்கலாம். இப்படி ஒரு தடவை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உங்களது சமையலுக்கு தான் அடிமையாக இருப்பார்கள். எப்படி கறிகுழம்பு சுவையில் காலிஃபிளவர் குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என என அனைத்தையும் இன்று இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • உப்பு
  • 3 tbsp மல்லி
  • 5 வர மிளகாய்
  • 1 tbsp மிளகு
  • 1 tbsp சீரகம்
  • 6 பல் பூண்டு
  • கருவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • ¼ KG காலிஃபிளவர்
  • 1 tbsp கடுகு
  • 2 tbsp பூண்டு
  • 2 tbsp இஞ்சி
  • கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 2 தக்காளி
  • உப்பு
  • ½ tbsp கரம் மசாலா
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சிறிது சிறிதாக வெட்டி இரண்டு முறை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.பின்பு தண்ணீர் வடிந்ததும் உன் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  2. எண்ணெய் நன்றாக காய்ந்ததும் காலிபிளவரை அதில் போட்டு நன்றாக பொரித்து கொள்ளுங்கள். காலிஃப்ளவர் நன்றாக பொரிந்ததும் தனியாக ஒரு பவுளில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அதன் பின்பு அதே கடாயில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் வர மிளகாய் நன்றாக சிவந்ததும் இதனுடன் நாம் வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  4. பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும் இதனுடன் நாம் துருவி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின் அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு தனியாக குளிர வைத்துக் கொள்ளுங்கள் குளிர்ந்த உடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு கடாயை அடுப்பில் வைத்து கடுகு, பூண்டு, இஞ்சி, மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்கவும். பின் நம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்.
  7. பின் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தக்காளியின் பச்சை வாடை போயி நன்றாக கொதித்து வைத்தவுடன்.
  8. காலிஃபிளவர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் குழம்பு நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளவும். 5 நிமிடம் கழித்து குழம்பு கொதித்தவுடன்.
  9. அதன் பின்பு கடைசியில் கரம் மசாலா சேர்த்து. பின் நாம் சிறிது சிறிதாக வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் ருசியான காலிபிளவர் கறி குழம்பு இனிதே தயார்.