அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

Summary: கோதுமை மாவுஎன்றாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கும். கோதுமையில் தோசையா? வேண்டாம் என்று கூறுபவர்களும்உண்டு. ஆனால் இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம், சப்பாத்தி செய்ய நேரம் இல்லாதவர்கள்சட்டுனு கோதுமை தோசை செய்வார்கள். டயட்டில் இருப்போர் எப்போதும் ஒட்ஸையே காலை வேளையில் சாப்பிடாமல், சற்று கோதுமையையும் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.நீங்கள் வழக்கம் போல் செய்யாமல் இது போல ஒரு முறை செஞ்சுபாருங்க, கோதுமை மிளகு தோசை இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.சுவையான கோதுமை மிளகு தோசை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம்தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1/2 அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொள்ள வேண்டும்.
  3. வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கவந்து வைத்துள்ள மாவை எண்ணெய் ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
  5. இப்போது சூப்பரான கோதுமை மிளகு தோசை ரெடி.