இரவு உணவுக்கு இப்படி மசாலா ரவை இட்லி செய்து கொடுத்தால் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள்சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல்கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மசாலா ரவை இட்லி செய்துசாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த மசாலா ரவைஇட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த மசாலாரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வதுஎன்பதை இந்த சமையல் குறிப்பு பதிவுதெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 2 கப் புளிக்காத தயிர்
  • 1 கப் நீர்
  • உப்பு
  • சமையல் சோடா
  • முந்திரி பருப்பு
  • எண்ணெய்
  • 1 டேபிள்ஸ்புன் கடுகு
  • 1 டேபிள்ஸ்புன் உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 2 வத்தல் மிளகாய்
  • 10 இலைகள் கறிவேப்பிலை
  • 1 டேபிள்ஸ்புன் மஞ்சள் தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மசாலா ரவை இட்லி செய்வதற்கு முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.புளிக்காத தயிரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
  2. தயிருடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு. உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்
  3. அதனுடன் ரவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.இட்லி செய்வதற்கு சற்று முன்பாக சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. இட்லி தட்டுகளை எடுத்து அவற்றின் நடுவில் முந்திரி பருப்பை வைத்து, அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கவும்.மிருதுவான மசாலா ரவை இட்லி ரெடி