அசத்தலான கொத்தவரங்காய் புளிக்குழம்பு  எப்படி சுவையாக செய்வது? இது தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

Summary: புளிக்குழம்பு அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும்புளிக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான புளிக்குழம்புக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு. அந்த வகையில் இப்படிப்பட்ட புளி குழம்புஎப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்தசமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/4 கிலோ கொத்தவரங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • புளி
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்துமல்லி தழை
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • 1/2 கப் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/2 டீஸ்பூன் மல்லி பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கொத்தவரங்காயை தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் தேங்காய், மிளகாய் பொடி மல்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின் வெங்காயம், தக்காளி, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பின்னர், அரைத்து வைத்த கலவையை ஊற்றி , கொதிக்க விடவும். வேகவைத்த காயை சேர்த்து. எண்ணெய் பிறிது வந்ததும், இறக்கிவிடவும்.
  5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்