சுவையான ராகி அடை செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து சுவையான ராகி அடை செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் ராகி மாவுடன் காய்கறிகளை சேர்த்து செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் அடையும். ராகி சிறுதானியங்களில் ஒன்றாக இருப்பதால் அதில் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது உதரணமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ராகி அடையை செய்து சாப்பிட்டால் அவர்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். அதையும் தாண்டி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ராகி அடையை செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் ராகி மாவு
  • 5 tbsp எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துருவிய கேரட்
  • 1 கப் கொத்தமல்லி
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கப் ராகி மாவு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இதனால் ராகி அடை மிருதுவாகவும், மென்மையாகவும் வரும் பின்பு ராகி மாவு நன்கு வறுப்பட்டதும் ஒரு பெரிய பவுளில் தட்டிக் கொள்ளுங்கள்.
  2. பின்பு கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  3. வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கி அதன்பின் அதனுடன் ஒரு துருவிய கேரட் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன்பின் ஒரு கப் கொத்தமல்லி இலைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  4. அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் கடாயை இறக்கி விடுங்கள் பின் வதக்கிய பொருட்களை நன்கு குளிர்ந்ததும் ராகி மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். அதன் பின்பு மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  5. அதன் பிறகு ஒரு வாழை இலையில் நன்றாக எண்ணெய் தடவி விட்டு ஒரு உருண்டை ராகி மாவை உருட்டி அதை இலையில் வைத்து நன்கு மெல்லிதாக தட்டிக் கொள்ளுங்கள், பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ராகி மாவை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. இவ்வாறு மீதம் உள்ள ராகி மாவையும் உருண்டை பிடித்து வாழை இலையில் தட்டி தோசை கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ராகி அடை தயாராகிவிட்டது.