Summary: உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும்இருக்கும்ஃ புல்கா உடன், இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜி சேர்த்து சாப்பிட்டால் மிகவும்அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம். இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜ்ஜியை ஒரு முறை இட்லி, தோசை,சப்பாத்திக்குசைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டு தான் பாருங்க,அருமையாக இருக்கும்.முன்பெல்லாம் டிபன்என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூரி போன்றவை இருக்கும். அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னிதான் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ்வகைகள் வீட்டிலேயே செய்து தருகிறோம். அந்த வகையில் இப்போது கத்திரிக்காய் தக்காளி சப்ஜிவைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.