ருசியான காடை மிளகு மசாலா இந்த ரெசிபி தெரிஞ்சங்க இனிமே ஜென்மத்துக்கும் காடை சாப்பிட ஹோட்டலுக்கு போகவே மாட்டீங்க!

Summary: காடை இறைச்சியின்அருமை பெருமைகளை அடுக்குகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆஸ்துமா, அல்சர் போன்றநோய்களைப் போக்குவதுடன் வற்றலாக சோகை பிடித்திருக்கும் நபர் காடை சாப்பிட்டால், கட்டழகன்ஆவான் என்கிறது நம் பண்டைய தமிழ் நூல்கள். காடை மிளகுமசாலா. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில் இருக்கும்ஆண்களை சமையலில் கட்டி போட வேண்டும் என்றால் இந்த பெப்பர் சிக்கன் நமக்கு உடனடியாககை கொடுக்கும். முழுக்க முழுக்க கிராமத்து சுவையில் காடை மிளகு மசாலா செய்வது எப்படி.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 4 காடை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/2 கப் தயிர்
  • 2 கொத்து கொத்துமல்லி
  • 1 கொத்து புதினா
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 3 தேக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி உப்புகால் கப் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக்கொள்ளவும், இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்னை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும், 3 நிமிடம் கழித்து, மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  5. அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவையும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
  6. பின்னர் கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 15 நிமிடம் வேகவைக்கவும்.தண்ணீர் வற்றி சுருள் வந்தவுடன் அடுப்பை அணைத்து, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்