பள்ளி பாளையம் காளன் வறுவல் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: காளான் ப்ரை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இந்த பள்ளிபாளையம் உணவு கொங்குநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உணவகங்களில் மிகவும் பிரபலமானது. இதில் பள்ளிபாளையம்சிக்கன், காளான், பனீர் போன்றவை அடங்கும். அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சில சமயத்தில்நாக்கிற்கு ருசியை தரக்கூடிய வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா..அந்த சமயத்தில் மஸ்ரூம்மை வைத்து இப்படி ஒரு பள்ளிபாளையம் காளான் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.இது செய்வது மிக மிக சுலபம்தான். உங்களுக்கு பள்ளிப்பாளையம் காளான் ப்ரை எப்படி செய்வதென்றுதெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் பள்ளிப்பாளையம் காளான் ப்ரை ரெசிபியின் எளியசெய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Ingredients:

  • 10 கிராம் சிவப்பு வரமிளகாய்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 200 கிராம் காளான்
  • 2 சிறிய துண்டுகள் இஞ்சி
  • 8 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  • 1/2 கரண்டி சோம்பு
  • உப்பு
  • 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வர மிளகாயில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு தனியாக ஒரு தட்டில் இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு தோல் நீக்கிய வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  4. காளான் நன்கு வதங்கியதும் நாம் எடுத்து வைத்திருக்கும் மசாலாவை அதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை தட்டு போட்டு மூடி வேக வைத்துக் கொள்ளவும்.
  5. பின் கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பள்ளிபாளையம் காளான் வறுவல் தயார்.