நாவில் எச்சி ஊறும் பன்னீர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Summary: சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும். அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் இது போன்ற சமயங்களில் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் மிளகு வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்கள் ரூசியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையும் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்க்கும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான பன்னீர் மிளகு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 tbsp மிளகு
  • ½ tbsp சோம்பு
  • ½ tbsp சீரகம்
  • ¾ tbsp மல்லி
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 3 வர மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 200 கிராம் பன்னீர்
  • 3 tbsp எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • வறுத்து அரைத்த மசாலா
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மிளகு, சோம்பு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு மற்றும் வர மிளகாய் போன்ற பொருள்களை சேர்த்து எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  2. அனைத்து பொருட்களும் நன்கு வறுப்பட்டு மணம் வர தொடங்கியதும் நாம் வைத்திருக்கும் இரண்டு கொத்து கருவேப்பிலையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை ஈரப்பதம் போய் மொறு மொறுப்பு தன்மையுடன் வரும்போது கடாயை இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்த உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முழுமையாக பொடியாக அரைத்து விடாமல் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு குடை மிளகாய் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும்.
  5. பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் மற்றும் நம் மிக்ஸியில் அரைத்த பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும். பின் கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான பன்னீர் மிளகு வறுவல் தயாராகிவிட்டது.