சுவையான கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கத்தரிக்காய் கார குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆகையால் இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சுடான சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 6 கத்தரிக்காய்
  • 1 குழி கரண்டி எண்ணெய்
  • ¼ tsp கடுகு
  • ¼ tsp சீரகம்
  • ¼ tsp உளுந்த பருப்பு
  • ¼ tsp கடைலை பருப்பு
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • உப்பு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • ½ கப் புளி கரைசல்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  3. அதன் பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி மசிந்து வந்ததும். இதனுடன் நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  4. பின் கத்தரிக்காய் நன்கு வதங்காயதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான உப்பு, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி விட்டு தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.
  5. பின் மசாலா நன்கு வதங்கி வாசனை போகி குழம்பு நன்கு கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
  6. நீங்கள் குழம்புடன் மசாலாதூள் வகைகள் சேர்க்கும் போது இதனுடன் தயிர் 2 டீஸ்பூன் சேர்த்து கத்தரிக்காய் கார குழம்பு செய்தால் இதன் சுவை தாறுமாறாக இருக்கும்.