அடுத்தமுறை இறால் வாங்கினால் கடலூர் ஸ்பெஷல் இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க! சுவை அட்டகாசமா இருக்கும் !!

Summary: இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால்தொக்கு இறாலை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு தனியாக மசாலா அரைக்க தேவையில்லை. வீட்டில்இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுலபமான முறையில் சுவையான இறால் தொக்கு செய்யலாம்.இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம். அதை எவ்வேறு தயார் செய்வது என்பதுபற்றிப் பார்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ இறால்
  • 4 மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்
  • 2 வெங்காயம்
  • 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 3 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • கருவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தடவி வைத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில்எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்,பின் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. இறாலை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு குழம்பு மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி கொதிக்க விட வேண்டும், தண்ணி கொஞ்சம் சுண்டியதும்மறுபடியும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி இறாலை வேக வைத்துக் கொள்ளவும்.
  5. தண்ணீர் முற்றிலுமாக சுண்டி இறால் நன்கு தொக்கு பதத்திற்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  6. சுவையான இறால் தொக்கு தயார். சிறிதளவு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.