மணமணக்கும் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?

Summary: உங்கள் ஊர் பகுதிகளில் நீங்கள் ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்கிறீர்கள் என்றால் அதே காய்கறியை வைத்து தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் அவர்கள் ஒரு விதமான சுவையுடனும், மணத்துடன் அந்த பொரியலை செய்வார்கள். இப்படி நம் தமிழ்நாட்டிலேயே மாறுபட்ட சுவையுடனும், மணமுடனும் பல உணவுகள் உள்ளது. அப்படி இன்று நாம் பார்க்க இருக்கிற பொரியல் தான் சிதம்பரம் கத்தரிக்காய் பொரியல். இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் இந்த கத்திரிக்காய் பொரியல் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இருக்கும்.

Ingredients:

  • 1 tbsp எண்ணெய்
  • 2 tbsp மல்லி
  • 4 வர மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 3 tbsp எண்ணெய்
  • 4 கத்தரிக்காய்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • ¼ கப் புளி கரைசல்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • ½ tbsp மிளகு
  • கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி, பின் குக்கரை அடுப்பில் வைத்து அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்னர் கத்திரிக்காய் பொரியலுக்கு மசாலா பொடி அரைக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் வர மல்லி, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  3. மல்லி நன்றாக வறுபட்டதும் கடாயை இறக்கி வருத்த பொருட்கள் சிறிது நேரம் குளிர வைத்து அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் குக்கரில் வேகவைத்த கத்திரிக்காயை எடுத்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட்டு கொள்ளுங்கள்.
  4. பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளியுங்கள் பின்பு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் இதனுடன் நான் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி அதனுடன் நாம் மசித்து வைத்திருக்கும் கத்திரிக்காயையும் சேர்த்து கிளறி விடுங்கள்.
  6. பின்பு இதனுடன் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சிதம்பரம் கத்திரிக்காய் பொரியல் இனிதே தயாராகிவிட்டது.