மசாலா வாசனையுடன் ருசியான சிக்கன் கைமா ரொட்டி! ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: அசைவ பிரியர்களுக்கு இந்த சிக்கன் கைமா ரொட்டிமிகமிகப் பிடிக்கும். மசாலா பொருட்களை சேர்த்து , செய்யக்கூடிய இந்த சிக்கன் கைமா ரொட்டிவழக்கமாக செய்யப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, விட அதீத ருசியாக இருக்கும் பல பேர் வீடுகளில் இட்லி, தோசை, சப்பாத்திபோன்ற ஒரே மாதிரி யான உணவு தான் செய்வார்கள்.ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில்,கோதுமை மாவு சேர்த்து சிக்கன் கைமா ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்ளலாம்

Ingredients:

  • 1/4 கிலோ சிக்கன் கைமா
  • 200 கிராம் கோதுமை மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டி வைத்த சிக்கனுடன்,சிறிது உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், வேக வைத்த சிக்கன், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. பின்பு கலவை ஆறியதும் ,அதனுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்,
  5. பிசைந்த மாவை எழுமிச்சை யளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  6. சுவையான சிக்கன் கைமா ரொட்டி தயார்