பருப்பு இல்லாமல் ருசியான பொட்டுக்கடலை சாம்பார் இப்படி செய்து பாருங்க! அவசர நேரத்தில் கை கொடுக்கும்!

Summary: சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட ஒரு டிபன் சாம்பார் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.சாம்பாரின் சுவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருப்பவர்கள் இட்லியைவிருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லி சாம்பார் என்றாலே அது வேற லெவல் டேஸ்டில் இருக்கவேண்டும். உங்களுடைய வீட்டில் இட்லி செய்தால் ஒருமுறை இப்படி பொட்டுக்கடலை சாம்பார்வைத்து பாருங்கள். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரே மாதிரி சாம்பார் வைத்துபோர் அடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என்று யோசித்தால் இந்த சாம்பார்ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் பொட்டுக்கடலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள்
  • எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பொட்டுக்கடலை அரை கப் எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி இதனுடன் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சமாக நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  3. அதன்பிறகு அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்ததை கொதிக்கும் கலவையுடன் சேர்த்து சிறிது நேரம் கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்..
  4. சுவையான பொட்டுக்கடலை சாம்பார் தயார்
  5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.