மதிய உணவுக்கு ருசியான வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள்.ஒரு சில சமயம் வீட்டிலுள்ளவர்கள் பொர்ணமி, அமாவாசை தினங்களில் ஏதேனும் அசைவம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு அந்த நேரத்தில் அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் சுக்கா. வாருங்கள் இதனை எப்படி அசைவ சுவையில் சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 3 மீடியம் சைஸ் வாழைக்காய்
  • 2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  • 2 சிறிய தக்காளி
  • உப்பு
  • ஸ்பூன் மிளகு
  • ஸ்பூன் சீரகம்
  • ஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 6 சி.வெங்காயம்
  • 1 தக்காளி
  • ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 6 பூண்டு
  • இஞ்சி
  • 1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு
  • 1 டீ ஸ்பூன் கடுகு
  • 21/2 டேபிள் ஸ்பூன் தே.எண்ணெய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் வாழைக்காயை சுத்தம் செய்து, தோல் சீவி, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும்.
  3. பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்தவைகளை போட்டு, தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கிளறிய வாழைக்காயை, சிறிது சிறிதாக போட்டு, பொரித்துக் கொண்டு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, அதே கடாயில் வாழைக்காய் பொரித்த எண்ணெயுடன் மேலும், தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும், அரைத்த விழுதை போட்டு எண்ணெய் பிரிய நன்கு வதக்கவும்.
  6. அவை வதக்கினதும், பொரித்த வாழைக்காயை போடவும். ஒன்று சேர நன்கு வதக்கி வாழைக்காய் குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு பௌலுக்கு மாற்றவும்.
  7. சுவையான, சுலபமான வாழைக்காய் சுக்கா தயார்.