ருசியான முட்டைகோஸ் சாதம் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்களேன்! ஒரு தட்டு சாதமும் காலியாகும்!

Summary: அட்டகாசமான சுவையில் இருக்கும். முட்டைக்கோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். பாசுமதி அரிசி மற்றும் இத்தாலிய மூலிகைகளின் கலவையானது, இதன் சுவையை உயர்த்துகிறது மற்றும் உணவக பாணியில் ஃப்ரைட் ரைஸ் சுவையை அளிக்கிறது , ஆனால் எந்த சாஸ்களும் இல்லாமல் இந்த மிதமான மசாலா சாதம் அடிமையாக்கும் சுவைகளுடன் குழந்தைகளை கவர்கிறது.  முட்டைகோஸில்உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 100 கிராம் முட்டைக்கோஸ்
  • 2 கப் வேக வைத்து சாதம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் பொடிதாக நறுக்கிய இஞ்சி
  • 1 ஸ்பூன் பொடிதாக நறுக்கிய பூண்டு
  • 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  • மிளகுத்தூள்
  • உப்பு
  • 3 ஸ்பூன் கடலை எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடித்தாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. அவை வதங்கியதும், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதங்கினால் போதும்.
  3. பின், நீளமாக வெட்டிய முட்டைகோஸ் சேர்த்து கிளறவும். உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறி, 5-7நிமிடங்களுக்கு எண்ணையிலேயே முட்டைகோஸை  நன்றாகவேக வைக்கவும்.
  4. முட்டைக்கோஸ் நன்றாக வெந்ததும், மிளகு தூள் மற்றும் வேக வைத்து சாதம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு உப்பு, காரம் சரி பார்க்கவும்.
  5. அவ்வளவு தான் இதன்‌ மேல் சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். முட்டைகோஸ் கலர் மாறாமல் வேகா வைத்தால் சாதம் நன்றாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  6. சுவையான,காரமான முட்டைகோஸ் சாதம் ரெடி.