மிருதுவான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி ?

Summary: ருசியான மற்றும் மிருதுவான மட்டன் கோலா உருண்டையை யாருக்குத்தான் பிடிக்காது, அசைவ பிரியர்களுக்கு இந்த வாரம் கடைசில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை. அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த மட்டன் கோலா உருண்டையை பரிமாறினாள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும்.

Ingredients:

  • ¼ கிலோ மட்டன் கொத்துக்கறி
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி தேங்காய்ப் பால்
  • கடலைமாவு
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஆட்டுக்கறியை நன்றாக கொத்தி, எலும்புகள் இல்லாதவாறு வாங்கிக்கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  2. பின்பு கொத்துக்கறியை உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  3. பின்பு வேகவைத்த கொத்துக்கறியை ஆரிய பின், அதில் தண்ணீர் இருந்தால் அவற்றை பிழிந்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
  4. அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் பால், கொத்தமல்லி இலை, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
  5. இந்த கலவையில் சிறிது கடலை மாவை சேர்த்து சிறு சுண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
  6. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை அதில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. இப்பொழுது சவையான மற்றும் மெருதுவான மட்டன் கோலா உருண்டை இனிதே தயாராகிவிட்டது.