ஹோட்டல் சுவையில் நூல் பரோட்டா வீட்ல இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி சுவை தான்!

Summary: பலர் பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பரோட்டா தான். ஆம், இன்று பரோட்டா பற்றி தான் பார்க்க இருக்கிறோம் என்னதான் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் தொடர்ந்து சாப்பிடுவதற்கு என்றாவது ஒரு நாள் சாப்பிடுவதில் ஒன்றும் பிரச்சனை இருக்காது. அதுவும் நீங்கள் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு இந்த பரோட்டாவை நீங்களே வீடுகளில் செய்து சாப்பிடலாம் அதுவும் என்று நாம் பார்க்கப் போகிறது சமீபத்தில் பிரபலமாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நூல் பரோட்டா.

Ingredients:

  • 3 கப் மைதா மாவு
  • 1 tbsp உப்பு
  • ½ tbsp சர்க்கரை
  • தண்ணீர்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பவுளில் மூன்று கப் அளவு மைதா மாவு எடுத்துக் கொண்டு அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு உப்பு மற்றும் அரை டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதனுடன் கொஞ்சம் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்திற்கு வரும் வரை பிசைந்து கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு பிசைந்த மைதா மாவை ஒரு ஐந்து நிமிடங்கள் மாலை மாற்றி மாற்றி நன்கு அடித்து பிசைந்து கொள்ளுங்கள், அதன் பின்பு மாவின் மீது இரண்டு டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி மாவு முழுவதும் தடவி ஒரு ஈரத்துணி வைத்து ஒரு இரண்டு மணி நேரங்கள் ஊற விடுங்கள்.
  3. அதன் பின்பு மாவை உருண்டை பிடித்து உங்களுக்கு தேவையான அளவிற்கு வில்லையை தயார் செய்து கொள்ளுங்கள், அதன் பின்பு நாம் தயார் செய்த வில்லையில் ஒரு மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெயில்யி ஒரு அரை மணி நேரம் நன்கு ஊற விடுங்கள்.
  4. அதன் பிறகு மேஜையின் மீது எண்ணெய் ஊற்றி வில்லையை வைத்து கைகளால் நன்கு அழுத்தி விடுங்கள். அதன் பின்பு பூரிக்கட்டையை வைத்து மாவை நீளமாக மற்றும் மெல்லிதாகவும் தேய்த்து விடுங்கள்.
  5. பின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு கத்தியால் நூல் போல கீறி விடுங்கள். பின்பு மாவை கைகளால் எடுத்து ஜிலேபி போல் மடித்து விடுங்கள். அதன் பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
  6. பின் கல் நன்கு காய்ந்தது நாம் மடித்து வைத்திருக்கும் மாவை கைகளால் நன்கு அழுத்தி விட்டு அப்படியே தோசை கல்லில் சேர்த்து விடுங்கள், இப்படியாக தோசைக்கல்லில் ஒரு நான்கு புரோட்டாவை சேர்த்து ஐந்து நிமிடம் அன்பு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  7. பின்பு தோசைக்கல்லில் வெந்த பரோட்டாவை கைகளால் இரண்டு முதல் நான்கு முறை அடித்தால் புரோட்டா நூல் போல் உதரியாகிவிடும். அவ்வளவுதான் சுவையான நூல் பரோட்டா தயாராகிவிட்டது.