ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

Summary: பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்வதும் ரொம்ப சுலபம்தான். சுவையான ஹை ஃபைபர் சப்பாத்தி எப்படி சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம்இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான்இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில்பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில்,ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி குறைவா இருக்குமா? என்றுநினைக்காதீங்க . இதோட ருசி அருமையாக இருக்கும். வாங்க ஹை ஃபைபர் சப்பாத்தி ரெசிபியை பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் சோயா மாவு
  • 1/2 கப் கம்பு மாவு
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வாணலியை சூடக்கி வெந்தயத்தை போட்டு சிறிதளவு சிவக்க வறுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
  2. மிக்ஸியில் முதலில் வெந்தயத்தை பொடித்துக் கொள்ளவும். அதனுடன் மற்ற மாவுகளையும் போட்டு இரண்டு மூன்று சுற்று அரைக்கவும்.
  3. மாவு கலவையை மிக்ஸியிலிருந்து எடுத்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பின்பு கோதுமை மாவு தூவி சப்பாத்தியாக தேய்க்கவும். சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும்.
  5. சன்னா மசாலா, குருமாவுடன் பரிமாறலாம்.